Pages

Saturday 30 June 2018

ஆற்றல்-2018' அறிவியல் கண்காட்சி


மட்டுநகர் சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவும் சிவாநந்தாபழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "ஆற்றல்-2018" கல்விக் கண்காட்சி எதிர்வரும் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்) முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை பாடசாலையின் கலையரங்கு மற்றும் வளாகத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஆரம்ப பிரிவு மாணவர்களிடத்தில் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் முகமாக சிவாநந்தா தேசிய பாடசாலையின் அதிபர் திருவாளர் யசோதரன்  மற்றும் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத் தலைவர்  திருவாளர் முருகவேள் ஆகியோர் பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விசாரா ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக "ஆற்றல்-2018" கல்விக் கண்காட்சி சிறப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் கண்காட்சி பிரியர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத் தக்க விடயம்

மாணவர்களின் அறிவியல்சால் கைவினைப் பொருட்களுடன் மாணவர்களின் அறிவினை எழுச்சியுறச் செய்யும் பல்வேறுபட்ட பாரம்பரிய பொருட்கள், பாரம்பரிய குடிசைக் கைத்தொழில் பொருட்கள், பல்வேறுபட்ட இசைக் கருவிகள்,விவசாய மற்றும் மீன்பிடி நுட்பங்களின் காட்சிபடுத்தல்களும் ' ஆற்றல்-2018' இல் உள்ளடக்கப்பட்டுள்ளன 

ஆற்றல்-2018 கல்விக் கண்காட்சியினை கண்டு பயன்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்

பாடசாலை சமூகத்தினர், 
பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் 
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர்


No comments:

Post a Comment

Walden