Pages

Friday 12 February 2021

1000 ரூபாய் வேதன அதிகரிப்பை ஏற்கோம் - சிறுதோட்ட உரிமையாளர்கள் அறிவிப்பு



பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு, வேதன நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும், தனியர் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.


கடந்த தினம் கூடிய வேதன நிர்ணய சபை, இறப்பர் மற்றும் தேயிலை துறைசார்ந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது அடிப்படை வேதனத்தை 900 ரூபாவாகவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 100 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஆனால் அவ்வாறு அதிகரிக்கப்படுவதானது, சிறுதோட்ட உற்பத்தியாளர்களையும், தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நடத்துகின்றவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்று குறித்த சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், 75 சதவீதமான நிரம்பலை, சிறுதேயிலைத் தோட்டங்களே மேற்கொள்கின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வேதன நிர்ணய சபையின் தீர்மானத்துக்கான ஆட்சேபனையை முன்வைக்கவிருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களது ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Walden