Pages

Sunday 5 May 2019

97.5 மில்லியன் ரூபா

(மண்டூர் ஷமி)

வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் கம்பெரெலிய திட்டத்தின் கீழ்
இரு நாட்களில் 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அண்மையில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 97.5 மில்லியன் ரூபா போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த இரு தினங்களாக பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமiயில் நடைபெற்றது.


வீதிகள் கொங்கிறீட் இடல்,பாடசாலை பொது மைதானங்கள் புனரமைப்பு, மற்றும் ஆலயங்கள் புனரமைப்பு என மொத்தமாக 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் மற்றும் புனரமைப்பு வேலைகளை தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள ஆலய உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுதாபனத்தின் தலைவரும் போரதீவுபற்று பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சோ.கணேசமூர்தி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலயத்தலைவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.











No comments:

Post a Comment

Walden