Pages

Tuesday 5 June 2018

இலவசமாக கண் புரை சத்திர சிகிச்சை

Arivu ....

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் முற்றிலும் இலவசமாக கண் புரை சத்திர சிகிச்சை பெற விரும்புகின்ற நோயாளர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பலாலி இராணுவ வைத்தியசாலையில் முன்கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

இந்தியா மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்கள் மேற்கொள்வார்கள் என்பதுடன் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இவர்கள் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து சென்று மீண்டும் திருப்பி கூட்டி கொண்டு வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளையும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகமே மேற்கொண்டு உள்ளது.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் எண்ண கருவில் உருவான இவ்வேலை திட்டத்தில் இணைந்து கொண்ட பயனாளிகள் மாத்திரம் அன்றி இன்னமும் பயனாளிகளாக இணைய தவறிய கண் புரை நோயாளர்களும் முன்கட்ட பரிசோதனைகளுக்கு தயாரான நிலையில் இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் நெல்லியடி அலுவலகத்துக்கு அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு வருகை தருமாறு கோரப்படுகின்றனர்.   

செல்வாவின் நெல்லியடி அலுவலகம் ஸ்ரீலங்கா ரெலிகொம் கோபுரத்துக்கு அண்மையில் அமைந்து உள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு ஆர்வலர்கள்  0702095920 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதுகுரிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

Walden