Pages

Monday 2 May 2016

பாசிப்பயறு அறுவடை விழா

 தர்சி ...



திருக்கோவில் பிரதேசத்தில் பாசிப்பயறு அறுவடை விழா
நேற்று திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயத்ரி கிராமத்தில் கிழக்கு மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் வழங்கப்பட்ட பாசிப்பயறு செய்கையில் அறுவடை விழாவானது தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியை திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தின் லாகுகல வலயத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ இஸ்மாலெப்பை அவர்களும் மற்றும தங்கவேலாயுதபுர விவசாயப் போதனாசிரியர் ளு.சுஜிகாந்தன்இபொத்துவில் விவசாயப் போதனாசிரியர் ஆ.ர்.ஆ சஜாத்; இதிருக்கோவில்-04 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர் தி.சுகிர்தராஜன் அவர்களும் மற்றும் இப்பிரதேச விவசாயிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வலய உதவி விவசாயப் பணிப்பாளர் பாசிப்பயறானது மக்களின் தாவர புரதத்தேவையை நிவர்த்தி செய்யும் ஓர் பயிர் எனவும் குறுகிய காலத்தில் இப்பயிர்ச்செய்கையின் மூலம் அதிகஇலாபத்தை பெறலாம் எனவும் மேலும் இப்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள விரும்பும் ஏனைய விவசாயிகளுக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் விதைஇஏனைய உள்ளீடுகளை 50 மூ மானிய விலையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியை திருமதி தர்சினி ரவிச்சந்திரன் விவசாயிகளுக்கு பாசிப்பயறு பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டினார்.

No comments:

Post a Comment

Walden