Pages

Monday 28 April 2014

சமூக அணிதிரட்டல் செயலமர்வு

- நௌசாத் முகம்மட் இஸ்மாயில் -

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக பங்குபற்றுதலுடனான சமூக அணிதிரட்டல் செயலமர்வு

டயகோணியா சர்வதேச நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் சமூக எமது அங்கத்துவ அமைப்புக்களின் அணிதிரட்டல் திறனை விருத்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாண்டுக்கான செயற்பாடுகளினால் ஒன்றான ' சிவில் சமூகப் பங்குபற்றுதலுடனான சமூக அணிதிரட்டல்' செயலமர்வொன்றை அன்மையில் எமது இணையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடாத்தியது.
  
 

 இதன்போது தற்காலத்தில் எமது அங்கத்துவ அமைப்புக்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப்பிரச்சினைகள் , அரச மட்டத்தில் எழுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அபரிவிதமான முன்னெடுப்புக்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்கள் எவ்வாறான யுக்திகளை கையாண்டு மக்களை தமது செயற்பாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது. இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்த இணையத்தின் தவிசாளர் திரு: வ.பரமசிங்கம் அவர்கள் தெரிவிக்கையில் இச்செயலமர்வுக்கு வந்திருக்கின்ற எல்லோரையும் வரவேற்றுக்கொண்டு தற்காலத்தில் சமூகத்தை தமது செயற்பாடுகளோடு ஒருமித்த் வகையில் ஒன்றுதிரட்டுவது எனும் பொழுது மிகவும் சிரமத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது. இதனை எவ்வாறு நாங்கள் எங்களுடைய இலக்கை அடையும் வகையில் ஒரு முறையாக மாற்றிப்பயன்படுத்துவதற்கான உபாயங்களை இப்பயிற்சியின் மூலம் கற்றுத்தெரிந்து கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டார். இந்நிகழ்வில் இணையத்தின் பங்காளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தினுடைய சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துப்பரிமாறல்களையும் வழங்கினர். இந்நிகழ்வை சிரேஸ்ட வளதாரியும், எஸ்.எல்.சீ.டீ.எப். நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தருமான திரு: ஏ.சொர்ணலிங்கம் அவர்கள் சிறப்பாக சட்டகங்கள் மற்றும் புதிய சமூக அணிதிரட்டல் யுக்திகள், படிமுறைகள் போன்றவற்றைக் கையாண்டு துள்ளியமாகத் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்தாகும்.

No comments:

Post a Comment

Walden