Pages

Tuesday 25 March 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாபெரும் சிரமதானம்

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள நாவற்காடு கிராமத்தினைச் சேர்ந்த பொதுமக்களால் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சிரமதான நிகழ்வானது இன்று 25-03-2014, செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

குறித்த கிராமத்திற்குப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சமனந்தகுமார, கிராமசேவை உத்தியோகத்தர் கே.பிரதிபா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.அழகரெட்ணம் ஆகியோரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இச்சிரமதான நிகழ்வில் பெருமளவிலான நாவற்காடு கிராமப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் பங்கெடுத்து பிரதேச செயலக வளாகத்தில் ஒதுக்குப்புறமாகவும் சுற்றுமதிலை அண்டியும் காணப்பட்ட பற்றைக்காடுகள், முட்செடிகள் என்பனவற்றினை வெட்டியகற்றியதோடு அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் இதர மரக்கறிப் பயிர்களிடையே காணப்பட்ட களைகள் மற்றும் புற்பூண்டுகளையும் செருக்கிச் சுத்தப்படுத்தினர்.

இச்சிரமதான முடிவில் சேகரிக்கப்பட்ட குப்பை கூழங்கள் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கழிவுகள் சேகரிக்கும் வாகனத்திடம் கையளிக்கப்பட்டன.

எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இம்மாபெரும் சிரமதானத்தில் தமது சிரமம் பாராது பங்கெடுத்த அனைத்துப் பொதுமக்களுக்கும் பிரதேச செயலாளரின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

Walden