Pages

Friday 21 March 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல்"


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தீர்க்கப்படாது காணப்படுகின்ற பொது மற்றும் உட்கட்டுமானப் பிரச்சனைகள் தொடர்பில் ஓர் திட்டமிடப்பட்ட பொறிமுறையின் கீழ் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது தொடர்பான திறந்த கலந்துரையாடலொன்று பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இன்று (17-03-2014, திங்கட்கிழமை) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் சமாதானமும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதியின் ஆலோசகருமான கலாநிதி ரஜீவ விஜேசிங்க அதிதியாகக் கலந்துகொண்டு ஆலையடிவேம்பு பிரதேச அரச மற்றும் பொதுத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களுடன் இணைந்து பிரச்சனைகள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்ததுடன் அவை தொடர்பில் பொதுத்துறை நிறுவனங்களூடாகவும் அவை சார்ந்த சமுகமட்டங்களிலும் முன்னெடுக்கக்கூடிய தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மேலும் அமைச்சுமட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் மூலம் தீர்வுகாணப்படவேண்டிய பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக உறுதியளித்த அவர், மிக விரைவாக அவ்வாறான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

காலை 10.00 மணி முதல் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பணியாளர்கள், சிவில் சமுகப் பிரதிநிதிகள் மற்றும் பொலிசார் உட்பட ஏனைய பொதுத்துறை சார்ந்த அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 (14 photos)
Like ·  · 

No comments:

Post a Comment

Walden